தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தக வெளியீட்டு விழா

புத்தக வெளியீட்டு விழா

புத்தக வெளியீட்டு விழா


UPDATED : நவ 30, 2023 12:00 AM

ADDED : நவ 30, 2023 10:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2023 12:00 AM ADDED : நவ 30, 2023 10:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
ஏற்றுமதி வர்த்தகத்தை வளர்த்து, திருப்பூரை வளமாக்கியவர் சக்திவேல். பின்னலாடை ஏற்றுமதி சாம்ராஜ்யம் கட்டமைக்க இவரது முயற்சியும், உழைப்பும் உறுதுணையாக இருந்தது என திருப்பூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், வனிதா மோகன் பேசினார்.திருப்பூர் ஏற்றுதியாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் சக்திவேல், பனியன் தொழில் மற்றும் ஏற்றுமதி வர்த்தக மேம்பாட்டுக்கான சேவையாற்றி வருகிறார். இவரது, சேவைகளை விவரிக்கும் வகையில், இந்திய ஏற்றுமதியின் பீஷ்ம பிதாமகன் என்ற புத்தகத்தை அவரின் மனைவி செல்வீஸ்வரி எழுதியுள்ளார்.இதன் வெளியீட்டு விழா, பாப்பீஸ் ஓட்டலில் நேற்று நடந்தது. கோவை கே.ஜி., குழுமம் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலையில், துலிப் பேஷன்ஸ் சண்முகவடிவேல் புத்தகத்தை வெளியிட்டார். சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் ராஜ்குமார், மணி அப்பேரல்ஸ் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.நிகழ்ச்சியில், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசியதாவது:
புத்தகத்துக்கு பொருத்தமான தலைப்பு அமைந்துள்ளது. எதையும் சந்திப்போம்; எதையும் சாதிப்போம் என்று உதாரணமாக வாழ்பவர். ஏற்றுமதி வர்த்தகத்தை வளர்த்து, திருப்பூரை வளமாக்கியவர். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி சாம்ராஜ்யம் கட்டமைக்க இவரது முயற்சியும், உழைப்பும் உறுதுணையாக இருந்தது.ஒவ்வொரு மாநிலமும், திருப்பூர் போன்ற நகரம் உருவாகாத என்று ஏங்குகின்றன. அந்த அளவுக்கு திருப்பூரை வளர்த்தி, வளமாக்கினார். முடியாது என்ற எண்ணமே இல்லாதவர். இந்திய ஏற்றுமதியின் பீஷ்மபிதாமகன் புத்தகம், எதிர்கால சந்ததிக்கு ஆவணமாக இருக்கும். நமது ஊரில், பல பீஷ்மர்களை உருவாக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us