வாழ்வியல் திறன் பயிற்சியாளர் பட்டியலில் கல்லுாரி செயலாளர்
வாழ்வியல் திறன் பயிற்சியாளர் பட்டியலில் கல்லுாரி செயலாளர்
UPDATED : நவ 30, 2023 12:00 AM
ADDED : நவ 30, 2023 10:07 AM
அ நிறம் | அளவு
கோவை:
நாட்டின் முதல் பத்து பயிற்சியாளர்கள் பட்டியலில், நீலகிரி கலை அறிவியல் கல்லூரிசெயலாளர் ரஷீத்கசாலி இடம் பிடித்துள்ளார்.அமெரிக்க இந்தியா பத்திரிகையின், டாப் 10 வாழ்வியல் திறன் பயிற்சியாளர்கள் (லைப் கோச்) பட்டியலில், சர்வதேச வாழ்க்கை முறை பயிற்சியாளர் ரஷீத் கசாலி இடம் பிடித்துள்ளார். ரஷீத் கசாலி,11 நாடுகளில் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு, பயிற்சி அளித்துள்ளார். இவரின் தலைமைத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில், புதுமையான வாழ்க்கைப் பயிற்சி, மற்றும் பல தலைமைத்துவம் மற்றும் ஊக்கமூட்டும் பயிற்சி ஆகியவை, இவரை டாப் 10 பட்டியலில் இடம் பெற செய்துள்ளது. தற்போது, இவர் கோவை பாரதியார் பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
