UPDATED : டிச 19, 2023 12:00 AM
ADDED : டிச 19, 2023 10:23 AM
சின்னாளபட்டி:
காந்திகிராமம் அருகே அம்பாத்துறையில் அரசு பிற்பட்டோர் கல்லுாரி மாணவியர் விடுதி உள்ளது. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவியர் தங்கி உள்ளனர்.திண்டுக்கல் பொன்னகரம் மாணவியர் விடுதி காப்பாளர் தமிழ்ச்செல்வி கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். சமையலராக செல்வமணி, காஞ்சனா, துப்புரவு பணியாளர் பாப்பாத்தி உள்ளனர்.18 மாதங்களாக மாணவிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை அதிகாரிகள், திண்டுக்கல் உதவி கலெக்டர், உள்ளாட்சி அமைப்பு, வி.ஏ.ஓ., ஆகியோருக்கு தொடர்ந்து புகார்கள் தெரிவித்தனர்.நடவடிக்கை இல்லாத சூழலில் நேற்று காலை கொட்டும் மழையில் குடை பிடித்தப்படி நான்கு வழிச்சாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்துார் தாசில்தார் வடிவேல் முருகன், உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர் சாதிக் ஆய்வு நடத்தினர்.
