UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : ஜன 02, 2024 09:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணியிடம் வேகமான மாற்றத்தை அடைந்துவரும் இன்றைய சூழலில், திறன் வளர்ப்பு பேருதவிபுரியும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மாணவர்கள், பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 2 லட்சம் நபர்களை கொண்ட இந்த விரிவான ஆய்வில், ‘82 சதவீத பணிபுரியும் வல்லுநர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் காரணமாக வேலை நீக்கம் சாத்தியம்’ என்று கவலை தெரிவித்துள்ளனர். மேலும், பதிலளித்தவர்களில் 39 சதவீதம் பேர், ’ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு, நிறுவனங்களில் தொழில் வளர்ச்சி வாய்ப்புகளை கணிசமாக பாதிக்கிறது’ என்று நம்புகின்றனர்.