UPDATED : ஜன 01, 2024 12:00 AM
ADDED : ஜன 01, 2024 10:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில், புத்தக பேரவை என்ற அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது.அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சென்னப்பன் தலைமை வகித்தார். இதில் ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வாசிப்பு திறனை எவ்வாறு மேம்படுத்துவது, இலக்கிய கூட்டங்களை நடத்துவது, ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும், பேரவையின் தற்காலிக தலைவராக சென்னப்பன், செயலாளராக ரவி, பொருளாளராக தமிழ்ச்செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.