UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 10:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து அர்ஜுன் மோகன் விலகியுள்ளார். பைஜூஸ் நிறுவனம் பல்வேறு நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்ற அர்ஜுன் மோகன் ஏழே மாதங்களில் தற்போது அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
இதைத்தொடர்ந்து நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளை பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் கையாள்வார் என பைஜூஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனம், கற்றல் செயலி, ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சி மையங்கள், மற்றும் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவது என அதன் செயல்பாடுகளை மூன்றாக பிரித்து கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.