UPDATED : பிப் 07, 2025 12:00 AM
ADDED : பிப் 07, 2025 10:09 AM
வாடிப்பட்டி :
வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்க் கூடல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை வகித்தார். இளங்கோ முத்தமிழ் மன்றச் செயலாளர் சங்கரலிங்கம், ஆலோசகர் எழுத்தாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ராணி வரவேற்றார்.
எழுத்தாளர் பாலசுப்ரமணியம், தன்னம்பிக்கை பேச்சாளர் நவ்ஷாத் தமிழ் மொழியின் சிறப்பு, முக்கியத்துவம், பழமை, இனிமை குறித்து பேசினர். ஆசிரியர் கணேஷ் மாலா படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.
கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் பொன் கலைதாசன் தொகுத்து வழங்கினார். திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவித் தலைமை ஆசிரியர் பிரேமா நன்றி கூறினார்.