UPDATED : டிச 23, 2025 07:03 AM
ADDED : டிச 23, 2025 07:03 AM
மதுரை:
மதுரையில் அரசு உதவி பெறும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு பணிமேம்பாட்டு ஊதியம், நிலுவைத்தொகை வழங்க வலியுறுத்தி ரோடுமறியலில் ஈடுபட்ட கல்லுாரி ஆசிரியர்கள் 124 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெத்தானியாபுரம் அருகில் பைபாஸ் ரோட்டில் மூட்டா, ஏ.யூ.டி., சங்கங்கள் சார்பில் நடந்த போராட்டத்திற்கு மூட்டா சங்கமண்டலத் தலைவர்கள் ரமேஷ்ராஜ், சுப்புராஜ் தலைமை வகித்தனர். தலைவர் பெரியசாமிராஜா, பொதுச்செயலாளர் செந்தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தனர். ஜூலையில் பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கப்படும் என அரசு உறுதியளித்தும், இன்னும் வழங்கப்படவில்லை. நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பொருளாளர் தேவகி, ஓய்வுபெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் சாலமன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்பாளர் வேல்தேவா பங்கேற்றனர்.

