UPDATED : மார் 20, 2026 02:54 PM
ADDED : மார் 20, 2026 02:55 PM
திருப்பத்தூர்:
திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மூன்று இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு தேசிய அங்கீகார வாரியம் அங்கீகரித்துள்ளது.
இக்கல்லூரியில் உள்ள கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல், மின்சார மற்றும் மின்னணு பொறியியல் ஆகிய மூன்று பாடப்பிரிவுகளுக்கு என்.பி.ஏ., எனப்படும் புதுடில்லியிலுள்ள தேசிய அங்கீகார வாரியம் அமைத்த நிபுணர் குழுவால் விரிவான மதிப்பீடு செய்யப்பட்டது.
மதிப்பீட்டின் அடிப்படையில் இப்படிப்புகளுக்கு 2026 - 2028ஆம் ஆண்டிற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.
இந்த அங்கீகாரத்தை பெற ஒருங்கிணைந்து பணியாற்றிய முதல்வர், டீன்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களை கல்லூரி நிர்வாகம் பாராட்டினர்.

