sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்லுாரியில் இலக்கியத் திருவிழா

/

கல்லுாரியில் இலக்கியத் திருவிழா

கல்லுாரியில் இலக்கியத் திருவிழா

கல்லுாரியில் இலக்கியத் திருவிழா


UPDATED : மார் 21, 2026 11:32 AM

ADDED : மார் 21, 2026 11:34 AM

Google News

UPDATED : மார் 21, 2026 11:32 AM ADDED : மார் 21, 2026 11:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
புதுச்சேரி, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆங்கிலத்துறை சார்பில், இலக்கிய திருவிழா நடந்தது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் பொருளாளர் ராஜராஜன் பேசுகையில், “இலக்கியமே மனித வாழ்வின் அடித்தளமாக விளங்குகிறது. ஐம்புலன்களை கொண்டு மொழியையும் இலக்கியத்திறனையும் நாம் உணர்கிறோம்.

இலக்கிய சிந்தனையின் வழியே தொழில்நுட்ப அறிவை மனிதனால் மேம்படுத்திக்கொள்ள முடியும். தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பயன்பாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது,” என்றார்.

விழாவில், புதுச்சேரி, தமிழ்நாடு பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கல்லுாரிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணவர்களின் படைப்பாற்றல் திறன், கற்பனைத்திறன், தனித்திறன்களை வெளிப்படுத்தும் விதமாக கவிதை, கதை, ஓவியம், புகைப்படம், நாடகம், பேச்சு, விவாதம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கல்லுாரி ஆங்கில துறைத் தலைவர் இளமாறன் மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us