தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


UPDATED : ஏப் 27, 2026 06:35 PM

ADDED : ஏப் 27, 2026 06:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 27, 2026 06:35 PM ADDED : ஏப் 27, 2026 06:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1982 - 84ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் குழுவினர் சந்திப்பு நிகழ்ச்சி, தில்லை மேஸ்திரி வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

நிகழ்ச்சியில், அப்போது பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களான கல்வித்துறையின் முன்னாள் இணை இயக்குநர் கிருஷ்ணராஜ், முன்னாள் உடற்கல்வி இயக்குநர் முத்துவேலன், வணிகவியல் ஆசிரியர் நடராஜன் மற்றும் பொருளாதார ஆசிரியர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர்.

சந்திப்பில் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பள்ளியின் முன்னாள் மாணவர் கலைமாமணி சுந்தர முருகன் சிறப்புரை ஆற்றினார்.

ஏற்பாடுகளை மதிவாணன், ஒளிர்வேல், ரகுபதி, ராமலிங்கம், நிர்மலா, லலிதா, அருள்மொழி, அருணா மற்றும் பலர் செய்திருந்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us