தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெண்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

பெண்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

பெண்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி


UPDATED : ஏப் 27, 2026 06:37 PM

ADDED : ஏப் 27, 2026 06:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 27, 2026 06:37 PM ADDED : ஏப் 27, 2026 06:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கண்ணகி நகர்:
ஓ.எம்.ஆரில், பெண்களுக்கான திறன் மேம்பாட்டு இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் மற்றும் முதல் தலைமுறை கற்றல் மையம் இணைந்து, ஓ.எம்.ஆர்., கண்ணகி நகரில், பெண்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்துகின்றன.

ஓட்டுநர், கணினி, டெய்லர், அழகு கலை மற்றும் ஆரி எம்பிராய்டரி ஆகிய பயிற்சிகள், நான்கு மாதங்கள் நடைபெறும். தினமும், நான்கு மணி நேரம் வீதம், இரண்டு வேளை நடைபெறும்.

பயிற்சியை முடித்த பின், சுய தொழில் துவங்க ஆலோசனை, அதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். கண்ணகி நகர், எழில் நகர், துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பெண்கள் பயன் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு, 044 - 2458 1021 மற்றும் 92800 86991 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என, முதல் தலைமுறை கற்றல் மைய நிர்வாகி மாரிசாமி கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us