தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளமைக்காலத்தில் பொறுப்புணர்வு அவசியம்

இளமைக்காலத்தில் பொறுப்புணர்வு அவசியம்

இளமைக்காலத்தில் பொறுப்புணர்வு அவசியம்


UPDATED : செப் 28, 2026 02:03 PM

ADDED : செப் 28, 2026 02:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 02:03 PM ADDED : செப் 28, 2026 02:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்:
கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம், 71 இடங்களில் தொடங்கியது.

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் நடந்த முகாமில், கோவை மாவட்ட தொடர்பு அலுவலர் சங்கர் பேசுகையில், “இளமைக் காலத்தில் பொறுப்புணர்வு, சமூக ஒற்றுமை, ஆரோக்கியமான சமுதாயம் உருவாக மாணவர்களின் பங்கு என்ன என்பதை உணர்த்துவதே இம்முகாமின் நோக்கம்.

மாணவர்கள் மொபைல் போனை, நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வதை தவிர்த்தல் வேண்டும்.

இருசக்கர வாகன உரிமம் பெற்றவர்கள் மட்டுமே, வாகனங்களை இயக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து மாணவர்கள் செயல்பட வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க உரிய முயற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் மணிமாறன், நாட்டு நல பணி திட்டத்தின் பயன்களை எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார், திட்ட அலுவலர் செல்வராஜ், உதவி திட்ட அலுவலர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில், 25 மாணவர்கள் கலந்துகொண்டு தொடர்ந்து, 7 நாட்கள், பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us