UPDATED : நவ 26, 2026 04:19 PM
ADDED : நவ 26, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
கோவை:
பள்ளி மாணவர்களிடம் புத்தாக்க சிந்தனை மற்றும் தொழில்முனைவு திறன்களை வளர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி, பாரதியார் பல்கலையில் நேற்று நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா தலைமை வகித்தார். தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளிக் கல்வித்துறை, யுனிசெப் இணைந்து ஆறு கட்டங்களாக பயிற்சியை நடத்துகின்றன. 603 வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
