தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களுக்கு கலாம் அறிவுரை

ஆசிரியர்களுக்கு கலாம் அறிவுரை

ஆசிரியர்களுக்கு கலாம் அறிவுரை


UPDATED : டிச 22, 2010 12:00 AM

ADDED : டிச 22, 2010 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2010 12:00 AM ADDED : டிச 22, 2010 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மாணவர்களை வித்தியாசமாக சிந்திக்க, ஆசிரியர்கள் தூண்ட வேண்டும் என்று டாக்டர். அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார்.


தலைநகர் டெல்லியில் ராணுவ பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற, "தேசிய பண்புநலன் கட்டமைப்பு" என்ற தலைப்பிலான விழாவில் பேசிய அப்துல்கலாம், "சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை ஆசிரியர்கள் தூண்ட வேண்டும். தேசத்தின் கட்டுமானத்தில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் மகத்தானது" என்றார்.


மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய ராணுவ கல்வி நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் சிங், மாணவர்களுக்குள் நல்லொழுக்கம் மற்றும் நன்னெறி பண்புகளை ஆசிரியர்கள் ஊட்ட வேண்டும் என்று கூறினார்.


இந்நிகழ்ச்சியில் டெல்லி பகுதியிலுள்ள ஏராளமான பள்ளிகளிலிருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி, ராணுவ கல்வி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us