தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி முதல்வர்களுக்கு பயிற்சி

பள்ளி முதல்வர்களுக்கு பயிற்சி

பள்ளி முதல்வர்களுக்கு பயிற்சி


UPDATED : டிச 22, 2010 12:00 AM

ADDED : டிச 22, 2010 04:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2010 12:00 AM ADDED : டிச 22, 2010 04:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டெல்லி வட்டாரப் பள்ளிகளின் முதல்வர்களுக்கு பயிற்சியளிக்க, டெல்லி முனிசிபல் கார்பரேஷன்(எம்.சி.டி.) திட்டமிட்டுள்ளது.


பள்ளி மேலாண்மையில் ஏற்பட்டுள்ள சமகாலத்திய முன்னேற்றம், கல்வி சம்பந்தமான நுட்பங்கள் ஆகியவற்றை பள்ளி முதல்வர்கள் அறிந்து கொள்ளவும், பள்ளி மேலாண்மையில் அவர்கள் சந்திக்கும் சவால்களையும், கஷ்டங்களையும் மூத்த அதிகாரிகளிடம் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கும் விதமாகவும் இந்த பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.


டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் முதல் பயிற்சியில் 196 பள்ளி முதல்வர்கள் பங்கேற்கிறார்கள். மீதமுள்ள 1746 பள்ளிகளின் முதல்வர்கள் எதிர்வரும் பயிற்சிகளில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் என்.ஜி.ஓ. பிரதிநிதிகள், கல்வியாளர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.


ஊக்கப்படுத்தல், குழு செயல்பாடு, தலைமைத்துவம் மற்றும் திறனை மேம்படுத்தல் போன்ற விஷயங்களில் கலந்துரையாடல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us