தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.ஜே.டி. வழங்கும் பயிற்சி

ஐ.ஐ.ஜே.டி. வழங்கும் பயிற்சி

ஐ.ஐ.ஜே.டி. வழங்கும் பயிற்சி


UPDATED : ஜன 17, 2011 12:00 AM

ADDED : ஜன 17, 2011 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2011 12:00 AM ADDED : ஜன 17, 2011 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு


வேலை சம்பந்தப்பட்ட பயிற்சிக்கான இந்திய நிறுவனம்(ஐ.ஐ.ஜே.டி), தனிப்பட்ட நிதி ஆலோசனையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சி.எப்.பி. திட்டத்துடன் இணைந்து செல்லும் விதமாக, ஒரு பயிற்சி படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.


மொத்தம் 250 மணி நேரங்கள் கொண்ட இந்த பயிற்சி திட்டத்தில், 50 மணி நேரங்கள் தொழில்துறை நிபுணர்கள் அளிக்கும் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் அவர்கள் அளிக்கும் பயிற்சியானது, பெங்களூர் ஸ்டூடியோவிலிருந்து விசாட் மூலமாக நேரடி ஒளிபரப்பாகிறது. மேலும் ஒவ்வொரு பகுதிக்கு பிறகும், எப்.பி.எஸ்.பி. இந்தியா வடிவமைப்பின் அடிப்படையில், பயிற்சி கேள்விகளை ஐ.ஐ.ஜே.டி. வழங்குகிறது.


இந்த பயிற்சிக்கான கட்டணம் ரூ.40 ஆயிரம். பயிற்சியில் மொத்தம் 5 பகுதிகள் உள்ளன. இதைப்பற்றி முழு விவரம் அறிய www.iijt.net என்ற வலைதளத்தில் தேடவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us