UPDATED : பிப் 20, 2011 12:00 AM
ADDED : பிப் 20, 2011 01:11 PM
அ நிறம் | அளவு
தேசிய அளவிலான 7 வது திறனாய்வு தேர்வை என்.ஐ.ஐ.டி. வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி நடத்துகிறது.
ஐ.டி. துறையில் இளைஞர்களின் திறனாய்வு அறிவை சோதிக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் இந்த தேர்வு, நாடு முழுவதும் 120 நகரங்களில் ஒரே நேரத்தில் நடக்கிறது.
எனவே ஐ.டி. துறையில் தங்களின் திறனாய்வை சோதிக்க விரும்பும் மாணவர்கள் www.niit.com என்ற வலைத்தளம் மூலம் பதிவுசெய்தோ அல்லது அருகிலுள்ள என்.ஐ.ஐ.டி. மையத்தை அணுகி பதிவுசெய்தோ, அந்த தேர்வை எழுதலாம்.
