UPDATED : பிப் 21, 2011 12:00 AM
ADDED : பிப் 21, 2011 02:02 PM
ஐ.ஐ.டி., சென்னை கல்வி நிறுவனம் 4,000 மாணவர்கள் தங்கும் வகையில் புதிய மாணவர் விடுதி கட்டடங்களை கட்ட உள்ளது. இதற்காக வளாகத்திலேயே ஒரு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அங்கு விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் தேவையற்றது என அடையாளம் காணப்பட்டுள்ள மரங்களை வெட்ட முடிவுசெய்துள்ளனர்.
ஐ.ஐ.டி., சென்னை இயக்குனர் ஆனந்த் கூறியதாவது, "தற்போது சில மாணவர்கள் அறைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதனால் மாணவர்கள் நலன் கருதி புதிய தங்கும் விடுதி கட்டப்படுகிறது. ஐ.ஐ.டி., வளாகத்தில் புள்ளி மான்கள், கீரிப்பிள்ளைகள், குரங்குகள், காட்டு பூனைகள், 40 வகை பட்டாம்பூச்சிகள் மற்றும் 100 அரிய வகை பறவைகள் உள்ளன. இவை மொத்தம் உள்ள 630 ஏக்கரில் 480 ஏக்கரில் வசிக்கின்றன. ஐ.ஐ.டி., யின் விரிவாக்கம் பணிகள் மொத்த பரப்பளவில் 20 சதவீதத்தை தாண்டாதவாறு நிச்சயமாக பார்த்துக்கொள்ளப்படும்.' இவ்வாறு ஆனந்த் கூறினார்.
