முதுநிலை மற்றும் பிஎச்.டி. படிப்புகளை வழங்கும் பெங்களூர் ஐ.ஐ.எஸ்சி.
முதுநிலை மற்றும் பிஎச்.டி. படிப்புகளை வழங்கும் பெங்களூர் ஐ.ஐ.எஸ்சி.
UPDATED : பிப் 21, 2011 12:00 AM
ADDED : பிப் 21, 2011 02:08 PM
பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகம்(ஐ.ஐ.எஸ்சி), பலவித படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இன்டக்ரேட்டட் பிஎச்.டி., எம்.எஸ்சி. இன்ஜினீயரிங்/பிஎச்.டி., எம்.இ/எம்.டெக். உள்ளிட்ட பலவித படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இன்டக்ரேட்டட் பிஎச்.டி. படிப்பிற்கான சேர்க்கை, ஏப்ரல் 24 ஆம் தேதி ஐ.ஐ.எஸ்சி நடத்தும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் இருக்கும். இந்த படிப்பானது உயிரியல், வேதியியல், இயற்பியல் மற்றும் கணித அறிவியல் பிரிவுகளில் நடைபெறுகிறது.
வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களில் முதல்வகுப்பு மதிப்பெண்களுடன் பி.எஸ்சி. முடித்தவர்கள் மற்றும் 2011-இல் இறுதியாண்டு தேர்வெழுதும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எம்.இ/எம்.டெக்/எம்.டெஸ் போன்ற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையானது கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். ஆனால் அதற்கு பி.இ/பி.டெக். படிப்புகளில் இரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி மார்ச் 21. ஆன்லைன் விண்ணப்ப வசதியும் உண்டு. இவை பற்றி விரிவான தகவல்களைப் பெற www.iisc.ernet.in என்ற வலைத்தளம் செல்லவும்.
