தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தடயவியல் நிபுணர்களுக்கு தட்டுப்பாடு

தடயவியல் நிபுணர்களுக்கு தட்டுப்பாடு

தடயவியல் நிபுணர்களுக்கு தட்டுப்பாடு


UPDATED : மார் 23, 2011 12:00 AM

ADDED : மார் 23, 2011 05:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 23, 2011 12:00 AM ADDED : மார் 23, 2011 05:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அதிலும் அதிகம் அறியப்படாத துறைகளில் கற்றுக் கொடுக்க ஆசிரியர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அதில் தற்போது முன்னணியில் இருப்பது தடயவியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் துறை.


தமிழ்நாட்டில் உள்ள 17 மருத்துவக் கல்லூரிகளில் வெறும் 20 தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களும், மருத்துவமனையில் பிரேத பரிசோதனையும் செய்ய வேண்டும், மாணவர்களுக்கு வகுப்புகளும் எடுக்க வேண்டும்.


கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் வெறும் 2 நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தடயவியல் அறிவியல் முக்கியப் பாடமாகும். ஆனால் இவர்களுக்கு பாடம் எடுக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை. இந்த நிலையில் இருக்கும் 2 நிபுணர்களில் ஒருவர் ராஜினாமா செய்து நிலைமையை இன்னும் மோசமாக்க உள்ளார்.


தடயவியல் பாட வகுப்பு நேரத்தில் மாணவர்கள் கேன்டீனிலும், நூலகத்திலும் நேரத்தை கழிக்கிறார்கள்.


பிரேத பரிசோதனை செய்ய ஆள் இல்லாத நிலையில் காது, தொண்டை போன்ற மற்ற பிரிவு பேராசிரியர்கள் பிரேத பரிசோதனை செய்கின்றனர். பிரேத பரிசோதனை இல்லாத நேரத்தில் வகுப்புகள் எடுக்க வேண்டும்.


இதை விட மோசமான நிலை திருச்சி, தஞ்சாவூர், தர்மபுரி மருத்துவக் கல்லூரிகளில் நிலவுகிறது. இங்கெல்லாம் பயிற்சி பெற்ற தடயவியல் நிபுணர்களே இல்லை.


ஒரே படிப்பை எல்லோரும் படித்துவிட்டு அதற்கேற்ற வேலை இல்லாமல் வாடும் இளைஞர்கள் ஒரு பக்கம் என்றால், ஒரு சில துறைகளில் படித்து பட்டம் பெற வேண்டிய மாணவர்களுக்கு படிப்பிக்க ஆசிரியர்களே இல்லை என்று சொல்வது மிகவும் வியப்பை அளிக்கிறது.


கல்வி நிறுவனங்கள் பல உள்ளன. அவை, நாட்டின் பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளை அறிந்து தங்களது பாடப்பிரிவுகளைப் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தினால், இதுபோன்ற தட்டுப்பாடுகள் ஏற்படாது.


மாணவர்களுக்கு பாடம் நடத்தவே தடயவியல் துறையில் படித்த ஆசிரியர்கள் இல்லை என்ற நிலையில், இந்த துறையில் படிக்கும் மாணவர்களின் நிலை என்ன? ஆசிரியர்களே இல்லாமல் படித்து இவர்கள் சிறந்த நிபுணர்கள் ஆவது எப்படி? இனியாவது, எல்லோரும் படிக்கும் படிப்பை எடுப்பது என்ற நோக்கத்தைக் கைவிட்டு, மிகவும் தேவை உள்ள துறைகளைத் தேர்ந்தெடுத்து படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us