தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமும் பறக்கும் படையினர்

தினமும் பறக்கும் படையினர்

தினமும் பறக்கும் படையினர்


UPDATED : மார் 30, 2011 12:00 AM

ADDED : மார் 30, 2011 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 30, 2011 12:00 AM ADDED : மார் 30, 2011 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


தினமலர் செய்தி எதிரொலியாக, பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களை தினமும் பறக்கும் படையினர் கண்காணிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்து வருகிறது. இதில் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள், ஒரே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றுவதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால், இவர்களை தினமும் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தினமலர் இதழில் செய்தி வெளியானது.


இதை தொடர்ந்து, அந்தந்த கல்வி மாவட்டங்களில் உள்ள அனைத்து தேர்வு மையங்களை தினமும் பறக்கும் படையினர், முதன்மை கண்காணிப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளரிடம் கண்காணிப்பு பணி, நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும்.


அந்த தகவல்களை பொறுப்பாளர் தேர்வுத்துறைக்கு தினமும் தெரிவிக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதை உடனடியாக அமல்படுத்தும்படியும் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us