UPDATED : ஏப் 23, 2011 12:00 AM
ADDED : ஏப் 23, 2011 04:05 PM
நம் நாட்டின் முக்கியமான பண்பாட்டு சின்னங்கள் இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டிலும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள சின்னங்கள், மாநில அரசின் தொல்பொருள் துறை பராமரிப்பிலும் உள்ளன. இது தவிர தனியார் சிலரும் தங்கள் பரம்பரைக்குரிய சின்னங்களை பராமரித்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள மன்றோ சிலை, மாநகராட்சி ரிப்பன் பில்டிங், மாநில கல்லூரியில் உள்ள செனட் ஹால், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் கட்டடங்கள் மற்றும் ஒவ்வொரு ஊர்களிலும் காணப்படும் மணிக்கூண்டுகள், டவுன்ஹால் கட்டடங்கள் போன்றவை பண்பாட்டு சின்னங்களாக கருதப்படுகின்றன.
ஒரு கட்டடத்தின் அமைப்பும், கலையுணர்வும், தொழில்நுட்பமும் காலத்தை பிரதிபலிப்பவையாக திகழ்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்டட வடிவமைப்புகளில் ஒவ்வொருவிதமான பாணி பின்பற்றப்படும். அதைக்கொண்டு தான் அக்கட்டடங்கள் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டவை என்பதை கண்டுபிடிக்க முடியும்.
எதிர்கால சந்ததியினர் இதை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு, அவற்றை பராமரிப்பதற்காக ஒரு துறையும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையில் ஆய்வு பணிகளை மேற்கொள்பவர்களும் உள்ளனர். இவர்கள் வரலாற்று முக்கியதுவம் உள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்த, மண்ணில் புதைந்திருக்கும் சிதைவுகளை ஆராய்ச்சி செய்வர்.
இதற்கான இளங்கலை பி.ஏ., கல்வித்துறை வகுப்புகள் செயல்படும் பகுதிகள்:
* பெங்களூரு யூனிவர்சிட்டி, பெங்களூரு - 560056.
* டாக்டர் பி.எஸ்.,அம்பேத்கர் மராத்வதா யூனிவர்சிட்டி, அவுரங்கபாத் -431004.
* குருஷேத்ரா யூனிவர்சிட்டி, குருஷேத்ரா - 136119.
* மங்களூர் யூனிவர்சிட்டி, மங்களகங்கோத்ரி - 574199.
* எம்.எஸ்.யூனிவர்சிட்டி ஆப் பரோடா, வதோதரா - 390002.
* நார்த் மஹாராஷ்டிரா யூனிவர்சிட்டி, ஜல்கான் - 425002.
புராதன இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, தொல்பொருள் துறைக்கான முதுகலை படிப்பிற்கான பல்கலைகள் வருமாறு:
* அலகபாத் யூனிவர்சிட்டி, அலகபாத் - 211002.
* ஆந்திரா யூனிவர்சிட்டி, விசாகபட்டினம் - 530003.
* தீன் தயாள் உபாத்யாயா கோரக்பூர் யூனிவர்சிட்டி, கோரக்பூர் - 273009.
* யூனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ், சென்னை - 600005.
* யூனிவர்சிட்டி ஆப் மைசூரு, மைசூரு - 570005.
* நாகர்ஜூனா யூனிவர்சிட்டி, நாகர்ஜூனா நகர், குண்டூர் - 522510.
* உஸ்மானியா யூனிவர்சிட்டி, ஹைதராபாத் - 500007.
* பூர்வாஞ்சல் யூனிவர்சிட்டி, ஜான்பூர் - 222002.
தொல்பொருள் துறைக்கான முதுகலை பட்டப்படிப்பிற்கான பல்கலைக்கழகங்கள் வருமாறு:
* ஏ.பி.சிங் யூனிவர்சிட்டி, ரிவா - 486003.
* பிஎச்யூ. வாரணாசி - 221005.
* சத்திரபதி ஷாகுஜி மகராஜ் யூனிவர்சிட்டி, கான்பூர் - 208024.
* டெக்கான் காலேஜ் போஸ்ட் கிராஜூவேட் அண்ட் ரிசார்ச் இன்ஸ்டியூட், ஈர்வதா, புனே - 411006.
* டாக்டர் ஹரிசிங் கவுர் விஸ்வாவித்யாலயா, சாகர் - 470003.
* ஜிவாஜி யூனிவர்சிட்டி, குவாலியர் - 474011.
* குருசேத்ரா யூனிவர்சிட்டி, குருசேத்ரா - 136119.
* எம்எஸ் யூனிவர்சிட்டி ஆப் பரோடா, வதோதரா - 390002.
* நாக்பூர் யூனிவர்சிட்டி, நாக்பூர் - 440001.
* பஞ்சாப் யூனிவர்சிட்டி, சண்டிகர்1 - 60014.
* பாட்னா யூனிவர்சிட்டி, பாட்னா - 800005.
* ராணி துர்காவதி விஸ்வாவித்யாலயா, ஜபல்பூர் - 482001.
* விஷ்வா பாரதி, சாந்திநிகேதன் - 731235.
* எச்என் பகுகுனா கார்வல் யூனிவர்சிட்டி, ஸ்ரீநகர் - 246174.
* குஜராத் யூனிவர்சிட்டி, அகமதாபாத் - 380009.
* யூனிவர்சிட்டி ஆப் புனே, புனே - 411007.
* யூனிவர்சிட்டி ஆப் கல்கத்தா, கோல்கத்தா - 700073.
