டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1தேர்வு ஆலோசனைக் கூட்டம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1தேர்வு ஆலோசனைக் கூட்டம்
UPDATED : ஜூலை 06, 2024 12:00 AM
ADDED : ஜூலை 06, 2024 09:48 AM
திண்டுக்கல்:
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இதற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சேக் முகையதீன், நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், ஏ.டி.எஸ்.பி., மகேஷ் கலந்து கொண்டனர்.
கலெக்டர் பூங்கொடி பேசுகையில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வு ஜூலை 13ல் நடக்கிறது. இதற்காக மாவட்டத்தில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வை கண்காணிக்க பறக்கும் படைகள், நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
15 இடங்களில் 22 தேர்வு மையங்களில் 6200 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 6 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும் படை, 23 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் அமைக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான குடிநீர், போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.