தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரி:மருத்துவ படிப்பில் 10 சதவீதம் ஒதுக்கீடு

புதுச்சேரி:மருத்துவ படிப்பில் 10 சதவீதம் ஒதுக்கீடு

புதுச்சேரி:மருத்துவ படிப்பில் 10 சதவீதம் ஒதுக்கீடு


UPDATED : ஜூலை 25, 2023 12:00 AM

ADDED : ஜூலை 25, 2023 09:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2023 12:00 AM ADDED : ஜூலை 25, 2023 09:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவை கூட்டம், நேற்று முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்சரவணன்குமார் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பின் முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:
மாநிலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - பி.ஏ.எம்.எஸ்., (ஆயுர்வேதம்) உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பரிந்துரையை கவர்னருக்கு அனுப்ப உள்ளோம். இதன் மூலம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 37 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள், 11 பி.டி.எஸ்., சீட்டுகள் மற்றும் 4 பி.ஏ.எம்.எஸ்., சீட்டுகள் கிடைக்கும். கடந்த ஆட்சியில் அமைச்சரவைக்கும், கவர்னருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது.அங்கு கோப்பு மறுக்கப்பட்டு மீண்டும் திரும்பி வந்துவிட்டது. தற்போது அமைச்சரவை அனுப்பியுள்ள பரிந்துரையை கவர்னர் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதனடிப்படையில் இம்முறை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு உறுதியாக கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us