UPDATED : நவ 02, 2026 06:01 PM
ADDED : நவ 02, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வை 10 ஆயிரத்து 810 பேர் எழுதினர்.
விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய மூன்று வட்டங்களை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்தாண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தேர்வு நடந்தது.
காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடந்த தேர்வை, 30 மையங்களில் எழுத 13,135 தேர்வர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர்.
காலை 9:00 மணிக்கு மையங்களுக்கு வந்த தேர்வர்களை, பாதுகாப்பு பணிகளில் இருந்த போலீசார், சோதனை செய்து உள்ளே அனுப்பி வைத்தனர். தேர்வை, 10 ஆயிரத்து 810 பேர் எழுதினர். 2,325 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
