டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு 81 சதவீத தேர்வர்கள் பங்கேற்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு 81 சதவீத தேர்வர்கள் பங்கேற்பு
UPDATED : நவ 02, 2026 06:02 PM
ADDED : நவ 02, 2026 06:03 PM
கரூர்:
கரூர், தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, 2ஏ முதல்நிலை தேர்வு, நடந்தது. கலெக்டர் பிரசன்னா ராமசாமி ஆய்வு மேற்கொண்டார்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, 2ஏ தேர்வு, கரூர் கோட்டத்தில், 17 மையங்களிலும், குளித்தலை கோட்டத்தில், ஐந்து மையங்களிலும் என, மொத்தம், 22 மையங்களில், 6,315 தேர்வர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றனர். இதில், 5,088 பேர் தேர்வு எழுதினர். இது, 81 சதவீதமாகும். மேலும், 1,227 பேர் தேர்வு எழுதவில்லை.
இத்தேர்வு மையங்களில் பணியாற்ற, 22 முதன்மை கண்காணிப்பாளர்கள், 22 அறை கண்காணிப்பாளர்கள், 6 பறக்கும் படையினர், 34 போலீசார் ஆகியோர் பணியில் ஈடுபட்டனர். 24 ஒளிப்பதிவாளர்கள் மூலம் வீடியோவில் தேர்வு பதிவு செய்யப்பட்டது.
தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், தேர்வு எழுத வந்த அனைத்து தேர்வர்களும் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் மற்றும் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வர்களின் உடமைகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டன.
