UPDATED : ஆக 07, 2014 12:00 AM
ADDED : ஆக 07, 2014 11:52 AM
சென்னை: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, 15 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.
சென்னையில், கொசு தொல்லைக்கு, தீர்வு காணும் வகையில், 10 லட்சம் நொச்சி செடிகள் வளர்க்கவும், முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, 66 ஆயிரம் தென்னங்கன்றுகளை வளர்க்கவும் திட்டமிடப்பட்டது.
முதல்கட்டமாக, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, நொச்சி செடிகள், தென்னங்கன்றுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம், எந்தெந்த மாணவர் வீடுகளில், அவற்றை வளர்க்க போதிய இடவசதி உள்ளது என கணக்கெடுத்து, பட்டியல் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, கல்வித் துறை 15 ஆயிரம் மாணவர்களின் பட்டியலை வழங்கி உள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில், 88 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கும் நிலையில், 15 ஆயிரம் பேரின் வீடுகளில் மட்டுமே, மரம் வளர்க்கும் அளவிற்கு இடவசதி உள்ளது என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களுக்கு, தென்னங்கன்றுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன.
