தனித்தேர்வர்களுக்கு டிசம்பர் 18ம் தேதி முதல் விண்ணப்பம்
தனித்தேர்வர்களுக்கு டிசம்பர் 18ம் தேதி முதல் விண்ணப்பம்
UPDATED : டிச 17, 2009 12:00 AM
ADDED : டிச 17, 2009 03:17 PM
தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகத்தில் வினியோகிக்கப்படுகிறது.
தேர்வுக் கட்டணம்: மெட்ரிகுலேஷனில் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.100+30+5=135, ஆங்கிலோ-இந்தியனில் ரூ.50+30+5=85 கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., தனித்தேர்வர்களுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.125. சென்னையில் வசிக்கும் தனித்தேர்வர்கள் கட்டணத் தொகையை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை-6 என்ற பெயரில் டி.டி., எடுத்து விண்ணப்பிக்க வேண்டும். சென்னை தவிர பிற மாவட்டங்களைச் சேர்ந்த தனித்தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை அரசு கருவூலங்களில் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 1ம் தேதிக்குள், விண்ணப்பங்கள் பெறப்பட்ட அலுவலகத்திற்கே அனுப்பிவைக்க வேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
