தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மூன்று வக்கீல்களின் பதிவு ரத்து : பார் கவுன்சில் முடிவுக்கு தடை

மூன்று வக்கீல்களின் பதிவு ரத்து : பார் கவுன்சில் முடிவுக்கு தடை

மூன்று வக்கீல்களின் பதிவு ரத்து : பார் கவுன்சில் முடிவுக்கு தடை


UPDATED : டிச 17, 2009 12:00 AM

ADDED : டிச 17, 2009 03:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2009 12:00 AM ADDED : டிச 17, 2009 03:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெய்வேலியைச் சேர்ந்த அரசு நாச்சியப்பன் என்பவர் தாக்கல் செய்த மனு: அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், கடந்த 2002ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தேன். கடந்த 2004ம் ஆண்டு மூன்றாண்டு பி.எல்., படிப்புக்கு விண்ணப்பித்தேன். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றேன். அம்பேத்கர் சட்டப் பல்கலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்படிப்பு முடித்தேன்.


அதன்பின், பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தேன். நெய்வேலியில் வக்கீலாக பிராக்டீஸ் செய்கிறேன். வக்கீலாக நான் பதிவு செய்ததை ரத்து செய்வது தொடர்பாக, தமிழ்நாடு பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதிவுச் சான்றிதழையும், அடையாள அட்டையையும் ஒப்படைக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
அம்பேத்கர் பல்கலைக் கழகத்தை பொறுத்தவரை, திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் படித்தவர்களை சட்டப் படிப்பு படிக்க அனுமதித்துள்ளது. சட்டப் படிப்பு முடித்த பின், அதற்கான சான்றிதழையும் அம்பேத்கர் பல்கலைக் கழகம் வழங்கியுள்ளது. வக்கீலாக பிராக்டீஸ் செய்வதற்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து சட்டப்படிப்பு பெற்றிருந்தால் போதுமானது.
 
அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகம், சட்டப்படிப்புக்கான சான்றிதழை வழங்க தகுதி உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக் கழகம், சட்டப்படிப்புக்கான சான்றிதழை வழங்கினால், அதுவே பார் கவுன்சிலை பொறுத்தவரை இறுதியானது. திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களை, சட்டப்படிப்பில் சேர அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது. திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் முதுநிலை பட்டத்தை, அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகம் அங்கீகரிக்கும் போது, அதற்கு எதிராக பார் கவுன்சில் செயல்படுவது சரியல்ல.
 
எனவே, கடந்த மாதம் 16ம் தேதி, தமிழ்நாடு பார் கவுன்சில் எடுத்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதே போன்று, மேலும் இரு வக்கீல்கள் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்களை நீதிபதி சுகுணா விசாரித்தார். மனுதாரர்களை பொறுத்தவரை, பார் கவுன்சில் நடவடிக்கைக்கு வரும் 21ம் தேதி வரை நீதிபதி சுகுணா இடைக்கால தடை விதித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us