தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேனியில் நர்சிங் பயிற்சிப் பள்ளிக்கு அடுத்த ஆண்டு அனுமதி

தேனியில் நர்சிங் பயிற்சிப் பள்ளிக்கு அடுத்த ஆண்டு அனுமதி

தேனியில் நர்சிங் பயிற்சிப் பள்ளிக்கு அடுத்த ஆண்டு அனுமதி


UPDATED : டிச 17, 2009 12:00 AM

ADDED : டிச 17, 2009 03:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2009 12:00 AM ADDED : டிச 17, 2009 03:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில், பி.எஸ்.சி., நர்சிங் கல்லூரி துவக்க விழா மற்றும் மாணவர்கள் விளக்கேந்தி உறுதி மொழி எடுக்கும் விழா நடந்தது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சண்முகம் தலைமை தாங்கினார்.


சுகாதாரத்துறை முதன்மை செயலர் சுப்புராஜ் கல்லூரியை துவக்கி வைத்து பேசியதாவது:
 
 செங்கல்பட்டில் துவக்கப்பட்டுள்ள பி.எஸ்.சி., நர்சிங் கல்லூரி தமிழகத்தில் மூன்றாவது அரசுக் கல்லூரி. சென்னை, மதுரை மருத்துவக் கல்லூரிகளில் 25 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். செங்கல்பட்டு கல்லூரி 50 மாணவர்களுடன் துவக்கப்பட்டுள்ளது. நர்சிங் பயிற்சிப் பள்ளிகள் அனைத்து மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளது. பெரும்பாலான பள்ளிகள் மருத்துவமனையில் எதாவது ஒரு வார்டில் இடம் ஒதுக்கப்பட்டு இயங்கி வருகிறது. செங்கல்பட்டு நர்சிங் கல்லூரி மத்திய அரசு வழங்கிய ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தில் துவக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் இயங்கிவந்த நர்சிங் பயிற்சிப்பள்ளி சேர்க்கை நிறுத்தப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவர்கள் தற்போது இல்லை. அடுத்த ஆண்டு முதல், நர்சிங் பயிற்சிப் பள்ளி தொடர்ந்து செயல்படும். வேலூரில் நர்சிங் பயிற்சி பள்ளி துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தேனியில் நர்சிங் பயிற்சிப் பள்ளி துவங்க அனுமதி அளிக்கப்படும்.


தமிழ்நாடு முழுவதும் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டடப் பணிகள் நடந்து வருகிறது. 500 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் 26 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள நர்சிங் பயற்சி பள்ளிகளின் கட்டமைப்புக்காகவும், பள்ளி வளர்ச்சிக்காகவும் 200 கோடி ரூபாய் மதிப்பீடு தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்.

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமாக 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் உள்ளது. எனவே எதிர்காலத்தில் மருத்துவ பூங்காவாக மாறும் வாய்ப்பு உள்ளது. தற்போது கட்டடம் பற்றாக்குறை இருப்பதால், 2 ஆண்டுக்கு முன்பு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. டெண்டர் விடப்பட்டு தற்போது பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடியும்போது செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு 150 மருத்துவ சீட்டுகள் கிடைக்கும். இவ்வாறு சுப்புராஜ் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us