தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இ.சி.இ. பிரிவில் 19 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர்

இ.சி.இ. பிரிவில் 19 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர்

இ.சி.இ. பிரிவில் 19 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர்


UPDATED : ஆக 05, 2011 12:00 AM

ADDED : ஆக 05, 2011 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2011 12:00 AM ADDED : ஆக 05, 2011 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்கிய நாள் முதலே இ.சி.இ. பாடப்பிரிவிற்கு அதிகமான மாணவர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர். இதில் 13,041 மாணவிகளும், 6316 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக இருக்கும் பாடப்பிரிவான மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில்

16,895 பேர் சேர்ந்துள்ளனர். இதில் மாணவர்கள் தான் அதிகம். மாணவிகள் வெறும் 86 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மீடியப் படிப்புகளான சிவில் இன்ஜினியரிங்கில்

219 பேரும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 191 பேரும் சேர்ந்துள்ளனர்.

மற்றப் பாடப்பிரிவுகளில் மொத்தம்

3526 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் 2 மாணவியர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதில் 545 பேர் மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.

அதிகபட்ச மாணவர்கள் சேர்ந்த மூன்றாவது பாடப்பிரிவாக கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங்கில்

13,280 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் 9118 பேர் மாணவிகள், 4162 பேர் மாணவர்களாவர்.

மொத்தமுள்ள

1,47,943 பொறியியல் இடங்களில், ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெற்ற கலந்தாய்வில் 82,026 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இவர்களில் 45 ஆயிரம் பேர் மாணவர்கள் 36 ஆயிரம் பேர் மாணவிகளாவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us