தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் தடுப்பு கண்காணிப்பு குழு

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் தடுப்பு கண்காணிப்பு குழு

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் தடுப்பு கண்காணிப்பு குழு


UPDATED : ஆக 06, 2011 12:00 AM

ADDED : ஆக 06, 2011 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2011 12:00 AM ADDED : ஆக 06, 2011 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியில் ராகிங் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தேனி மருத்துவக் கல்லுரி ஆஸ்பத்திரியில் 600 மாணவர்கள் படிக்கின்றனர்.

ராகிங் பிரச்னையை தவிர்க்க, கல்லூரி முதல்வர் வள்ளிநாயகம், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் முனியப்பன், கண்காணிப்பு அலுவலர் துளசிராம் தலைமையில், ராகிங் கண்காணிப்பு விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் ராகிங் தடுப்புக்குழு தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஒரு பேராசிரியர், ஒரு ஆண், பெண் டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

8 மணி நேரத்திற்கு ஒரு குழு வீதம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளும் வகையில், தினமும் மூன்று ஷிப்ட் ஆக குழுக்கள் செயல்படும். இக்குழுவினர் ஆஸ்பத்திரி, கல்லூரி, ஹாஸ்டல் பகுதிகளில் ரோந்து சுற்றி வருவார்கள்.

தொடர்ந்து ஒரு மாதம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர். ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், என ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் முனியப்பன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us