தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திண்டுக்கல்லில் ஏப்ரல் 19, 20ல் "வழிகாட்டி"

திண்டுக்கல்லில் ஏப்ரல் 19, 20ல் "வழிகாட்டி"

திண்டுக்கல்லில் ஏப்ரல் 19, 20ல் "வழிகாட்டி"


UPDATED : மார் 28, 2013 12:00 AM

ADDED : மார் 28, 2013 09:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2013 12:00 AM ADDED : மார் 28, 2013 09:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் மூன்று நாட்களாக "தினமலர்" நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சியை ஏராளமான மாணவர்கள் பெற்றோருடன் வந்து பல்வேறு கல்வி நிறுவனங்கள், அவற்றில் உள்ள படிப்புகள், கட்டணங்கள் குறித்த பயனுள்ள தகவல்களை பெற்றனர்.

எந்த படிப்புக்களுக்கு எதிர்காலம் உள்ளது. எந்த படிப்புக்களை தேர்வு செய்வது போன்ற விவரங்களையும் பல துறை கல்வியாளர்கள் விளக்கினர். இந்த வாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர், ஏப்.,19 மற்றும் 20ல் திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே. மகாலில், காலை 10 மணி முதல் மாலை 6 வரை நடக்கும் "வழிகாட்டி&' நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையலாம்.

"தகவல் தொழில்நுட்ப துறையில் திறமையுள்ளவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளத்துடன், உலகளாவிய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன,&'&' என, டி.சி.எஸ்., துணை தலைவர் ஹேமா கோபால் தெரிவித்தார்.

மதுரையில் தினமலர் மற்றும் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை இணைந்து, நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சியின் நிறைவு நாளில், "தகவல் தொழில் நுட்ப துறையின் தற்போதைய போக்கு" என்ற தலைப்பில் நேற்று அவர் பேசியதாவது:

தகவல் தொழில் நுட்பத்துறை என்பது ஒரு சார்பு துறை. வங்கி, பைனான்ஸ், இன்சூரன்ஸ், மருத்துவம், பொறியியல் உட்பட அனைத்து துறைகளிலும், தகவல் தொழில்நுட்ப துறையின் பங்கு முக்கியமானது. இந்திய ஐ.டி., நிறுவனங்கள், 70 நாடுகளில் 560 டெலிவரி சென்டர்களை கொண்டுள்ளன.

இதில், 2.75 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். 2013 நிதியாண்டில் 75 முதல் 77 பில்லியன் அளவுக்கு இத்துறையில் ஏற்றுமதி வர்த்தகம் நடக்கவுள்ளது. 2020ம் ஆண்டில் இதன் மதிப்பு 300 பில்லியன் என திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐ.டி., தொழில் முன்னிலையில் உள்ளது. இரண்டாம் தர நகர்களில் இத்துறையின் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எதையும் சாதிக்கலாம். எந்த நாட்டிலும் தங்கி பணியாற்றலாம் என்ற எண்ணம் உள்ளவர்கள் "பறக்கும் மீன்களாக" இத்துறையில் சாதிக்கலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us