தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பு முகாம் 193 பேர் பங்கேற்பு

வேலைவாய்ப்பு முகாம் 193 பேர் பங்கேற்பு

வேலைவாய்ப்பு முகாம் 193 பேர் பங்கேற்பு


UPDATED : நவ 21, 2026 04:36 AM

ADDED : நவ 21, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 04:36 AM ADDED : நவ 21, 2026 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
வேலைவாய்ப்பு மையத்தில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், 193 பேர் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை, சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. இதன்படி, இந்த மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (நவ.,20) நடந்தது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில், 22 வேலையளிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். வேலை தேடும் இளைஞர்கள் 193 பேர், கலந்துகொண்டனர்.

நேர்காணல் நடத்திய பிறகு, அதில், 5 மாற்றுத்திறனாளி உட்பட 57 நபர்கள், வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை, வேலை வாய்ப்புத்துறை உதவி இயக்குநர் பாலமுருகன் வழங்கினார்.

மேலும், 19 பேர் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த முகாம் ஏற்பாடுகளை, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலர்கள் மேற்கொண்டனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us