தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமைச்சர் வருகைக்காக 2வது முறையாக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

அமைச்சர் வருகைக்காக 2வது முறையாக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

அமைச்சர் வருகைக்காக 2வது முறையாக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு


UPDATED : டிச 12, 2009 12:00 AM

ADDED : டிச 12, 2009 08:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2009 12:00 AM ADDED : டிச 12, 2009 08:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த 2007ல் பல்கலை துணைவேந்தர் கருணாகரன் பதவியை ராஜினாமா செய்த பின், ஓராண்டிற்கும் மேலாக இடைக்கால நிர்வாக குழு பல்கலையை நிர்வகித்தது. துணைவேந்தர் பதவியிடம் காலியாக உள்ள நிலையில் பட்டமளிப்பு விழா நடத்த நிர்வாக விதிமுறைகளில் இடமில்லாததால் விழா தள்ளிப்போனது. தற்போதைய துணைவேந்தர் ராமசாமி கடந்த ஏப்ரல் முதல் தேதி பொறுப்பேற்றார். இதன்பின் கடந்த சில மாதங்களுக்கு முன் பல்கலையின் 26வது பட்டமளிப்பு விழா நடத்தி முடிக்கப்பட்டது.

இம்மாதம் 7ம் தேதி 27வது பட்டமளிப்பு விழாவை நடத்தவும், மத்திய இணை அமைச்சர் புரந்தேஸ்வரி பட்டமளிப்பு உரை நிகழ்த்தும் வகையிலும் திட்டமிடப்பட்டது. அமைச்சர் வருகைக்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி வரும் 19ல் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன.

இந்நிலையில் 19ம் தேதியும் அமைச்சர் வரஇயலாது என தெரிவிக்கப்பட்டதால், பட்டமளிப்பு விழா 2வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வருகைக்கான தேதி மீண்டும் உறுதி செய்யப்பட்ட பின், பட்டமளிப்பு விழாவிற்கான தேதியை பல்கலை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us