UPDATED : ஜூன் 02, 2016 12:00 AM
ADDED : ஜூன் 02, 2016 10:26 AM
வேலுார்
:
திருவண்ணாமலை அருகே அரசு பள்ளி திறந்த முதல் நாளிலேயே, தேனீக்கள் கொட்டியதில், 20 மாணவர்கள்
படுகாயம் அடைந்தனர்.
தி.மலை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, கோடை விடுமுறைக்கு பிறகு, நேற்று காலை, 9:00 மணிக்கு திறக்கப்பட்டது. இறை வணக்கம் முடிந்த பிறகு, மாணவர்கள் வகுப்பு களுக்குச் சென்றனர்.
அப்போது,
அங்கு நுழைவு வாயில் பகுதியில், ராட்சத தேன் கூடு இருந்துள்ளது. இதில் இருந்து திடீரென பறந்த
தேனீக்கள் மாணவர்களை கொட்டியது. இதைப் பார்த்த மாணவர்கள் நாலாபுறமும் சிதறி
ஓடினர்.
தேனீக்கள்
கொட்டியதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்
அடைந்தனர். உடனடியாக அனைவரும் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்
சேர்க்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டது.
பள்ளி திறந்த
முதல் நாளிலேயே, தேனீக்கள் கொட்டியதில், 20 மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளி
துவங்குவதற்கு முன், பள்ளி கல்வி இயக்குனர், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்திருப்பது, மாணவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டு
இருந்தது. இந்த சுற்றறிக்கையை, மங்கலம் பள்ளி பின்பற்றியதா என்ற
கேள்வி எழுந்துள்ளது.
பள்ளி திறந்த முதல் நாளிலேயே, தேனீக்கள் கொட்டியதில், 20 மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
