தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/க்யூட் தேர்வு 22,000 பேர் 100 சதவீதம்

க்யூட் தேர்வு 22,000 பேர் 100 சதவீதம்

க்யூட் தேர்வு 22,000 பேர் 100 சதவீதம்


UPDATED : ஜூலை 16, 2023 12:00 AM

ADDED : ஜூலை 16, 2023 04:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2023 12:00 AM ADDED : ஜூலை 16, 2023 04:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டில் உள்ள 200 மத்திய பல்கலைகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர, க்யூட் எனப்படும் பொது பல்கலை நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது. என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை, இந்தத் தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான க்யூட் தேர்வை எழுத, நாடு முழுதும், 11.11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் நேற்று, இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள் வெளியாகின. இதன்படி, 22,000 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.அதிகபட்சமாக, ஆங்கிலத்தில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, உயிரியல், பொருளாதாரத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில், 5,685 பேர்; உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பம் அல்லது உயிர் வேதியியல் பாடங்களில், 4,850 பேர்; பொருளாதாரத்தில் 2,836 பேர், 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us