sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் 23வது பட்டமளிப்பு விழா

ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் 23வது பட்டமளிப்பு விழா

ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் 23வது பட்டமளிப்பு விழா


UPDATED : மே 14, 2026 06:03 PM

ADDED : மே 14, 2026 06:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2026 06:03 PM ADDED : மே 14, 2026 06:05 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி, ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியின் 23வது பட்டமளிப்பு விழா நடந்தது.

கல்லுாரியின் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பெங்களூரு லேட்டன்ட் வியூ நிறுவனத்தின் மனித வளத் தலைமை அதிகாரி ரேமாதேவி தோட்டாட்டில் கலந்து கொண்டு பட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக தரவரிசையில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

அவர் பேசுகையில், 'கடின உழைப்பு, தொடர்ச்சியான கற்றல், ஆர்வம், நேர்மை, மனிதநேயம், துணிவு மற்றும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் திறன் ஆகியவை வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும். மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்வது இன்றைய காலத்தில் மிகவும் அவசியம் என, தெரிவித்தார்.

விழாவில், கல்லுாரியின் செயலாளர் சிவராம் ஆல்வா வரவேற்றார். பொருளாளர் விமல், அறங்காவலர்கள் சிந்து, முகமது சுைஹல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லுாரி முதல்வர் மகேந்திரன் பட்டமளிப்பு அறிக்கை வாசித்தார். டீன் கனிமொழி நன்றி கூறினார். பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை பேராசிரியர் திவ்யா, அறிவியல் மற்றும் மனிதவியல் துறை பேராசிரியர் கயல்விழி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us