UPDATED : ஏப் 22, 2026 11:57 AM
ADDED : ஏப் 22, 2026 11:59 AM
நத்தம்:
நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மேலாண்மைத்துறை சார்பில் 6வது சர்வதேச அளவிலான 'இன்கோகாம் 26' மாநாடு நடந்தது. கல்லூரி முதல்வர் செல்வபெருமான் தலைமை வகித்தார்.
புதுச்சேரி மேலாண்மை பல்கலை பேராசிரியர் அருள், மானாமதுரை அரசு கலை அறிவியல் கல்லுாரி தலைவர் டாக்டர் செண்பகநாதன், பெங்களூரு ஆதர்ஷ் மேலாண்மை தகவல் தொழில்நுட்பக் கல்லுாரி பேராசிரியர் குருசாமி, சென்னை சவிதா மேலாண்மைப் பள்ளி பேராசிரியர் செல்வலட்சுமி, பெங்களூரு கிறிஸ்து பல்கலை பேராசிரியர்கள் மோகனப்பிரியா, தமிழரசு, மதுரை முதுகலை ஆராய்ச்சி கல்லுாரி தலைவர் மயில்முருகன் பங்கேற்றனர்.
மேலாண்மை துறைத்தலைவர் வேல்முருகன் வரவேற்றார். ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் 349 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டனர். சிறந்த கட்டுரைக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதுகலை கணினிபயன்பாட்டியல் துறைத்தலைவர் பானுசித்ரா நன்றி கூறினார்.
