தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரையில் ஏப். 27ல் தினமலர் நடத்தும் நீட் மாதிரித்தேர்வு

மதுரையில் ஏப். 27ல் தினமலர் நடத்தும் நீட் மாதிரித்தேர்வு

மதுரையில் ஏப். 27ல் தினமலர் நடத்தும் நீட் மாதிரித்தேர்வு


UPDATED : ஏப் 23, 2025 12:00 AM

ADDED : ஏப் 23, 2025 09:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 23, 2025 12:00 AM ADDED : ஏப் 23, 2025 09:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை:
பிளஸ் 2 முடித்து மருத்துவ கனவில் உள்ள மாணவர்களுக்காக மதுரையில் தினமலர் நாளிதழ் - ஸ்டாரெட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் ஏப். 27 காலை 10:00 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கனவில் உள்ள மாணவர்கள் நலன் கருதி தினமலர் சார்பில் இந்த மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டும் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளைய டாக்டர் கனவு, நனவாகும் வகையில் மாணவர்களுக்கு இத்தேர்வு மூலம் தினமலர் வழிகாட்டுகிறது.

நீட் மெயின் தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள், தங்களை தாங்களே சுயமாக பரிசோதித்துக்கொள்ள இந்த மாதிரித் தேர்வு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 96777 60856 என்ற அலைபேசி எண்ணில் அழைத்து, தங்கள் பெயர், ஊர், அலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மாணவர்கள் முன்பதிவு செய்யலாம். தேர்வு நடக்கும் நாளில் காலை 9:45 மணிக்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். தேர்வு தமிழ், ஆங்கிலத்தில் நடத்தப்படும். அனுமதி இலவசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us