தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப் பள்ளிகளில் 3ம் பருவ பாடபுத்தகம் வழங்கல்

அரசுப் பள்ளிகளில் 3ம் பருவ பாடபுத்தகம் வழங்கல்

அரசுப் பள்ளிகளில் 3ம் பருவ பாடபுத்தகம் வழங்கல்


UPDATED : ஜன 06, 2026 07:12 PM

ADDED : ஜன 06, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2026 07:12 PM ADDED : ஜன 06, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை:
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளிகளில் படிக்கும் 5605 மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.

தமிழக அரசின் பாடத்திட்டத்தின் படி அரசு இரண்டாம் பருவம் முடிந்து நேற்று முதல் மூன்றாம் பருவம் துவங்கியதால் அதற்கான பாடப்புத்தங்கள் கடந்த இரு நாட்களாக திருவாடானை வட்டார கல்வி அலுவலகத்திலிருந்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தது.

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 80 அரசு தொடக்கப்பள்ளிகள், 19 நடுநிலைப் பள்ளிகள், 14 அரசு உதவி பெறும் பள்ளிகள், என 113 பள்ளிகள் உள்ளன.

இப்பள்ளிகளில் படிக்கும் 5605 மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. திருவாடானை வட்டாரக் கல்வி அலுவலர் தமிழரசி கூறுகையில், பள்ளிகளில் வகுப்பறைகள் உட்பட துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பள்ளிகள் திறக்கப்பட்ட நாளிலேயே மூன்றாம் பருவ பாட நுால்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேற்று அனைத்து பள்ளிகளிலும் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us