தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., கவுன்சிலிங் 3,600 பேர் விலகல்

இன்ஜி., கவுன்சிலிங் 3,600 பேர் விலகல்

இன்ஜி., கவுன்சிலிங் 3,600 பேர் விலகல்


UPDATED : ஆக 03, 2023 12:00 AM

ADDED : ஆக 03, 2023 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2023 12:00 AM ADDED : ஆக 03, 2023 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இன்ஜினியரிங் கவுன்சிலிங் முதல் சுற்றில், விருப்பமான இடம் கிடைக்கவில்லை எனக் கூறி 3,600 பேர் ஒதுக்கீடு பெறவில்லை; ஒரே மாணவர், 688 விருப்ப பாடங்களை பதிவு செய்து, ஒதுக்கீடு பெற்றுள்ளார்.அண்ணா பல்கலையின் இணைப்பில், 442 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள, 2.16 லட்சம் இடங்களில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 1,60,783 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில், முதல் சுற்றுக்கு, நேற்று காலையில் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இதில், 16,516 பேருக்கு உத்தேச ஆணை வழங்கியதில், விருப்ப பதிவுப்படி, 10,714 பேர் இடங்களை உறுதி செய்தனர். 5,800 பேர் தங்களது பதிவில் முந்தைய இடங்களை கேட்டுள்ளனர். 3,651 பேருக்கு விருப்பமான இடம் இல்லை என, இடங்களை பெறாமல் விலகியுள்ளனர்.நேற்றைய முதல் சுற்று ஒதுக்கீட்டில், 4,712 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ், 2,848 பேர் இ.சி.இ., 1,883 பேர் ஐ.டி., 1,799 பேர் செயற்கை நுண்ணறிவு, 1,206 பேர் எலக்ட்ரிக்கல் பாட பிரிவுகளை தேர்வு செய்துள்ளனர். ஒருவர் மட்டும், தமிழ் வழி இன்ஜினியரிங் தேர்வு செய்துள்ளார். கவுன்சிலிங்குக்கான ஆன்லைன் விருப்ப பதிவில் மாணவர்கள், தங்களுக்கான கல்லுாரிகளை எப்படி வரிசைப்படுத்துகின்றனரோ, அதன்படியே அவர்களின் தரவரிசைக்கு ஏற்ப, கணினி வழியில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.எனவே, மாணவர்கள் அதிகமான விருப்ப பதிவுகளை வரிசைப்படுத்தினால், எளிதாக இடங்களை பெறமுடியும் என, கவுன்சிலிங் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி மொத்தம், 200க்கு, 185 கட் ஆப் பெற்ற மாணவர் ஒருவர், 688 விருப்ப பாடங்களை பதிவு செய்துள்ளார். இதில், 33வது விருப்ப பதிவுக்கு, அவருக்கு இடம் கிடைத்துள்ளது.சேர்க்கை கட்டாயம்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் ஒதுக்கீட்டு இடத்தை உறுதி செய்தவர்கள், ஒதுக்கீடில் குறிப்பிட்ட கல்லுாரியிலும்; இடத்தை உறுதி செய்து, அதே நேரத்தில் வேறு இடங்களை கேட்டுள்ளவர்கள், கவுன்சிலிங் உதவி மையங்களிலும், வரும், 6ம் தேதிக்குள், தங்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டியது கட்டாயம். அப்போது, கல்லுாரி கட்டணத்தின் முன் தொகையை, ரொக்கமாகவோ, ஆன்லைன் வழியிலோ செலுத்தலாம்.இதில், அரசு பள்ளி மாணவர்கள், பிரதமர் கல்வி உதவி தொகை திட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகியோர், கட்டணம் செலுத்த வேண்டாம். ஆனால், சான்றிதழ்களை கொடுத்து, சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவர்களுக்கு ஒதுக்கிய இடம், 9ம் தேதி இறுதி பட்டியலில், வேறு நபருக்கு வழங்கப்படும் என, கவுன்சிலிங் கமிட்டி தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us