புதுச்சேரி துணைவேந்தர் மீது ஊழல் புகார்: விசாரிக்க உத்தரவு
புதுச்சேரி துணைவேந்தர் மீது ஊழல் புகார்: விசாரிக்க உத்தரவு
UPDATED : ஆக 03, 2023 12:00 AM
ADDED : ஆக 03, 2023 09:38 AM
சென்னை: புதுச்சேரி பல்கலையில், ஆசிரியர் உள்ளிட்டோருக்கு பயிற்சி தந்ததாக போலி ரசீது அளித்து ரூ.2.25 கோடி மோசடி என பேராசிரியர் ஒருவர் மீது புகார் எழுந்தது.இந்த விவகாரத்தில் துறை ரீதியிலான நடவடிக்கையை தவிர்க்க துணைவேந்தர் குர்மீத் சிங்கிற்கு ரூ.50 லட்சம் பணத்தை அந்த பேராசிரியர் லஞ்சமாக கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன், குர்மீத் சிங் மீதான ஊழல் புகார் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்தனர். சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், துணைவேந்தர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
