தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலம் இல்லை; மாணவர்கள் தினமும் பரிசலில் சவாரி

பாலம் இல்லை; மாணவர்கள் தினமும் பரிசலில் சவாரி

பாலம் இல்லை; மாணவர்கள் தினமும் பரிசலில் சவாரி


UPDATED : ஆக 03, 2023 12:00 AM

ADDED : ஆக 03, 2023 09:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2023 12:00 AM ADDED : ஆக 03, 2023 09:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:
பவானி ஆற்றை கடக்க உயர்மட்ட பாலம் கோரி, அம்மாபாளையம் கிராம மக்கள், 50 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். எனினும், அவர்களின் கோரிக்கை இன்னமும் ஏற்கப்படவில்லை.இதனால், ஆபத்தான முறையில் பரிசலில் மாணவியர் உட்பட பொதுமக்கள் பயணிக்கின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி யூனியன், அம்மாபாளையம் பஞ்சாயத்தில் அம்மாபாளையம், ராக்கனாம்பாளையம், கணேசம்புதுார் ஆகிய மூன்று கிராமங்களில், 1,600 பேர் வசிக்கின்றனர். திருப்பூர் லோக்சபா தொகுதியில், அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமமாக அம்மாபாளையம் உள்ளது. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் விவசாய கூலித்தொழிலாளர்கள்.பவானி ஆற்றின் மறுகரையாக இருக்கும், கைகாட்டி பிரிவுக்கு பரிசல் மூலம் மட்டுமே செல்ல முடியும். அம்மாபாளையம் கிராமம் ஆற்றின் மறு கரையில் உள்ளது. அம்மாபாளையத்தில் துவக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. அங்கு பயிலும் மாணவ, மாணவியர் உயர்கல்வி தொடரவும், மக்கள் வெளியூர் சென்று வருவதற்கும், பரிசல் மூலம் மட்டுமே ஆற்றை கடக்க முடியும். உயிரை கையில் பிடித்து கொண்டு, புத்தக பைகளுடன் அக்கரைக்கு பயணிக்கும், மாணவ - மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மழைக் காலத்தில் மாணவர்கள் பாடு திண்டாட்டம் தான். அவசர சிகிச்சை மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், சிகிச்சைக்கு பரிசல் பயணத்தையே நம்பியுள்ளனர். கடந்த, 50 ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வாக உயர்மட்ட பாலம் அமைத்து தந்தால் போதும் என மக்கள் போராடி வருகின்றனர். எனினும், இதுவரை பாலம் கட்ட எந்த அரசியல் கட்சியும் முன்வராததால், அம்மாபாளையம் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து அந்தியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடாசலம் கூறுகையில், அம்மாபாளையம் பகுதியில் பாலம் அமைப்பது குறித்து, அமைச்சர்கள் மூலம், முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பாலம் அமைப்பது அரசின் நடவடிக்கையில் உள்ளது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us