sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி, பல்கலைகளில் 'இ - வேஸ்ட்'கள் அகற்றம்

கல்லுாரி, பல்கலைகளில் 'இ - வேஸ்ட்'கள் அகற்றம்

கல்லுாரி, பல்கலைகளில் 'இ - வேஸ்ட்'கள் அகற்றம்


UPDATED : ஆக 21, 2025 12:00 AM

ADDED : ஆக 21, 2025 09:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2025 12:00 AM ADDED : ஆக 21, 2025 09:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு அலுவலகங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மின்னணு சாதன கழிவுகளை அகற்றுவதற்கான சிறப்பு பிரசாரத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் சார்பில், 'துாய்மை இந்தியா' இயக்கம், ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு விரைந்து தீர்வு காணவும், அலுவலகங்களை 'டிஜிட்டல்' மயமாக்கவும், மத்திய அரசின் சார்பில் சிறப்பு பிரசாரம், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், நடப்பாண்டு சிறப்பு பிரசாரம், அக்டோபர் 2 முதல் 31ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை சட்டத்தின்படி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், பயன்படுத்தப்படாத பழைய கணினிகள், மின்னணு சாதனங்கள், அவை தொடர்பான உபகரணங்கள் அகற்றப்பட உள்ளன.

அந்த வகையில், உயர் கல்வி நிறுவனங்களும், தங்கள் அலுவலக துாய்மைக்காக, 'இ - வேஸ்ட்' அகற்றுதலில் பங்கேற்க வேண்டும் என, கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us