UPDATED : டிச 27, 2025 10:23 AM
ADDED : டிச 27, 2025 10:26 AM

சென்னை:
சென்னை ஐஐடி-ன் வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழாவான சாஸ்த்ரா-2026, ஜனவரி 2 முதல் 6ம் தேதி வரை கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெறுகிறது.
ஆசியாவிலேயே மாணவர்கள் நடத்தும் மிகப்பெரிய தொழில்நுட்ப விழாவாகக் கருதப்படும் சாஸ்த்ரா-2026-ல், 80க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிகழ்வுகள், போட்டிகள், கண்காட்சிகள், பட்டறைகள் மற்றும் உலகளாவிய மாநாடுகள் நடைபெறுகின்றன. ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களால் நிர்வகிக்கப்படும், ஐஎஸ்ஓ 9001:2015 சான்றிதழ் பெற்ற இந்த விழா, 'கலைப்பொருள் அரங்கு' என்ற கருப்பொருளில் ரோபோ ஜிபி, நியூரோஹேக், டிஜிட்டல் ஆளுகை உச்சி மாநாடு, ஹார்ட்4யூ சமூக பிரச்சாரம் உள்ளிட்ட பல புதிய நிகழ்வுகளுடன், டாக்டர் ஜெய்சங்கர், பேராசிரியர் ஜெப்ரி உல்மேன் உள்ளிட்டோரின் சிறப்பு சொற்பொழிவுகளும் இடம் பெற உள்ளது.

