UPDATED : ஜன 30, 2025 12:00 AM
ADDED : ஜன 30, 2025 08:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழக தொடக்க கல்வி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 2009 ஜூன் மாதத்துக்கு பின், இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்றோர், அதற்கு முன் பணியில் சேர்ந்தோருக்கு இணையான சம்பளத்தை, சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
இதை ஆய்வு செய்ய, அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆசிரியர் சங்கங்களுடன் ஏற்கனவே மூன்று முறை ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளது.
நான்காவது கூட்டம், பிப்., 4ம் தேதி மாலை 4:00 மணிக்கு தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க, ஐந்து ஆசிரியர் சங்கங்களுக்கு, துறை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.