sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திண்டுக்கல்லில் ஏப்., 4, 5ல் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி

திண்டுக்கல்லில் ஏப்., 4, 5ல் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி

திண்டுக்கல்லில் ஏப்., 4, 5ல் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி


UPDATED : ஏப் 02, 2026 04:37 PM

ADDED : ஏப் 02, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 02, 2026 04:37 PM ADDED : ஏப் 02, 2026 04:41 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
பிளஸ் 2வுக்கு பின் உயர்கல்வியில் எந்த படிப்புகளை தேர்வு செய்யலாம், எங்கு படிக்கலாம் என பல்வேறு பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் 'தினமலர்', கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே., மஹாலில் ஏப்., 4, 5 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கின்றன.

பிளஸ் 2 எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி, உறுதியான எதிர்காலத்திற்கான முழுமையான வழிகாட்டுதல் அளிக்கும், அனுபவம் வாய்ந்த கல்வி நிபுணர்களால் ஏராளமான ஆலோசனைகள் வழங்கும் இந்நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

இந்தாண்டும் பிரமாண்டமாய், புத்தம் புதிய சிந்தனைகளோடும், 'ஏ.ஐ.,' யுக கனவுகளை நனவாக்கும் வகையிலும் மாணவர்களுக்கு வழிகாட்ட ஏப்., 4, 5 ஆகிய இரண்டு நாள் நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் கண்காட்சியுடன், கருத்தரங்குகளும் காலை 10:00 மணி முதல் மாலை 06:30 மணி வரை நடக்கின்றன.

கருத்தரங்குகளில் புதிய படிப்புகள், அரசு வேலை வாய்ப்புகள், நீட் தேர்வு விளக்கம், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், கலை, சட்டம், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங், ரோபாட்டிக்ஸ் உட்பட ஏராளமான கல்விப் பிரிவுகள் குறித்து துறைசார் நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

முன்பதிவு செய்யுங்கள்


இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம். 95667 77833 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு RGN என டைப் செய்து அனுப்ப வேண்டும். அனுமதி இலவசம்.

நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், கல்வி ஆலோசனை நிறுவனங்கள், பள்ளிகளின் அரங்குகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த அங்கேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

கல்லுாரிகளின் விண்ணப்பம் முதல் மாணவர் சேர்க்கை வரையிலான நடைமுறைகள், கல்விக் கட்டணம், கல்லுாரியில் உள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஒரே கூரையின் கீழ் அனைத்து ஆலோசனையும் பெறலாம்.

விடை சொன்னால் டேப்லெட், வாட்ச்


காலை, மாலையில் உயர்கல்வி நிபுணர்கள் ஆலோசனை வழங்கும் கருத்தரங்கு நிகழ்ச்சியின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் விடை அளிக்கும் மாணவர்களுக்கு டேப்லெட், டேப், வாட்ச் பரிசாக வழங்கப்படும்.

உங்கள் எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் உன்னதமான இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராகுங்கள் மாணவர்களே. இணைந்து வாருங்கள் பெற்றோரே.

இந்நிகழ்ச்சிக்கு பவர்டு பை:

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யாபீடம்.

இணைந்து வழங்குபவர்கள்:
மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,), சேலம் நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி. ஆடியோ பார்ட்னர் இன்போ பஸ்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us