தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நேரம் தவறிய 400 அரசு ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

நேரம் தவறிய 400 அரசு ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

நேரம் தவறிய 400 அரசு ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்


UPDATED : ஜன 30, 2010 12:00 AM

ADDED : ஜன 30, 2010 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2010 12:00 AM ADDED : ஜன 30, 2010 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி மாவட்டத்தில், 1,357க்கும் அதிகமான அரசு பள்ளிகளில், 4,000 மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, காலை 9.15 மணிக்கும், உயர்நிலைப் பள்ளிக்கு காலை 9.30 மணிக்கும், ஆசிரியர்கள் வர வேண்டும்.


ஆசிரியர்கள் சரியான நேரத்தில் வருவதில்லை என, கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து, டிசம்பர் முதல் தினமும், எத்தனை ஆசிரியர்கள், பணிக்கு சரியான நேரத்தில் வந்துள்ளனர் என, தலைமையாசிரியர், கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் அளிக்க உத்தரவிடப்பட்டது.


இதில், இரண்டு மாதங்களில், 400க்கும் அதிகமான ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வராதது தெரிந்தது. இதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us